Showing posts with label greetings. Show all posts
Showing posts with label greetings. Show all posts

Friday, 16 September 2011

ஹலோ உலகமே !!!

வணக்கம் !
     மிக நீண்ட நாட்கள் யோசித்து, பெரு முயற்சி செய்து இந்த ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கேன். உங்க எல்லாரோட ஆதரவும் இருந்தாலும் இல்லைனாலும் விட மாட்டேன். தொடர்ந்து எழுதுவேன்.
 
  
தலைப்ப வெச்சே நான் என்ன தொழில்ல இருக்கேன்னு கண்டுபுடிச்சு இருப்பீங்க ! இன்னைக்கு வரைக்கும் இது தான் எனக்கு சோறு போடுது. இனியும் போடும்னு நம்பிக்கை இருக்கு.
 
  நிறைய எழுதி குமுதம், கல்கண்டு, ராணி அப்டின்னு எவ்ளோ பத்திரிகைக்கு அனுப்பி பாத்தேன். லோக்கல் classifields ல கூட நாம குடுத்தத பிரிண்ட் பண்ண மாட்டேன்க்ரான்.
 
 
   இதுல ஒரு வசதி என்னானா யாரும் யார் கிட்டயும் அங்கீகாரம் கேட்க வேண்டியது இல்ல. Approval இல்ல. நாம சொல்றது தான் கதை. எழுதுறது தான் கவிதை. இந்த அராஜகத்தை சைபர் கிரைம் போலீஸ் கூட ஒன்னும் செய்யும் முடியாது.
    யாராவது  காசு குடுத்தா இல்ல சரக்கு வாங்கி குடுத்தா அந்த கட்சி சார்பா எழுதுவேன். இல்லைனா எல்லாரையும் கண்ட மேனிக்கு திட்டுவேன்.
     வாங்க படிங்க. அறிவு வளரும், ரசிக்க முடியும் அப்டிங்கிற கியாரண்டீ எல்லாம் ஓசில படிக்கிற உங்களுக்கு குடுக்க மாட்டேன்.
     இனிமே எழுத போறது எல்லாம் எனக்கு ரொம்ப நாளா இருக்கிற சந்தேகங்கள் பத்தி. கண்டிப்பா இதே சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கும்னு தெரியும். டெய்லி ஒன்னொன்னா பாப்போம்.
   நாளைக்கு அரசியல்வாதிகள் ஊழல் செய்தாலும் மக்கள் அவுங்களுக்கு மறுபடி ஓட்டு போடுவது ஏன்? அப்டின்னு நான் கேப்பேன்.. நீங்க தான் கமெண்ட் அடிச்சு பதில் சொல்லணும் .. வரட்டா .. இப்போவே 9 : 30 அப்புறம் கடைய மூடிடுவாங்க